பணயக்கைதிகளை விடுவிக்க இலங்கை பேச்சுவார்த்தை-ஹர்ஷ டி சில்வா

305 0

harsaஹ_தி கிளர்ச்சியாளர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஒன்பது இலங்கை மாலுமிகளை விடுவிக்க இலங்கை பேச்சுவார்த்தை நடாத்தி வருவதாக வெளிவிவகார பிரதி அமைச்சர் டாக்டர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

நேற்று பாராளுமன்றத்தில் உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

ஹ_தி கிளர்ச்சியாளர்கள் பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ள ஒன்பது இலங்கை மாலுமிகளை விடுவிக்க இலங்கை எந்த தரப்புடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றது என்பதை அவர் இதன்போது குறிப்பிடவில்லை.

ஒன்பது இலங்கை மாலுமிகளும் பிற நாட்டு 26 மாலுமிகளுடன் இணைந்து கிரேக்க கப்பலில் யேமன் எலையில் பயணித்துக் கொண்டிருந்த போதே பணய கைதிகளாக சிக்கியிருந்தனர். இவர்கள் இந்திய நிறுவனம் ஒன்றில் கடமையாற்றி வந்ததாகத் தெரவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கை மாலுமிகளை விடுவிக்க, இந்திய அரசின் உதவியை இலங்கை நாடியுள்ளது.

இவர்கள் இரண்டு மாதத்துக்கும் அதிகமாக பணய கைதிகளாக சிறை வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத் தக்கது.