மனைவிக்கு கொரோனாத் தொற்று உறுதியானதால் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார் குரேஷியா பிரதமர்!

306 0

மனைவிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து குரேஷியா பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஐரோப்பிய நாடானா குரேஷியாவில் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் (Andrej Plenković) (வயது 50) பிரதமராக உள்ளார்.இவரது மனைவி அனா மஸ்லேக் பிளென்கோவிக்கிற்கு நேற்று முன்தினம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

எனினும் பிரதமர் ஆண்ட்ரெஜ் பிளென்கோவிக் பரிசோதனை செய்ததில் தொற்று இல்லை என தெரிய வந்துள்ளது.இருந்தபோதும், அவர் தன்னை 10 நாட்களுக்கு தனிமைப்படுத்திக்கொள்வதாக அரசு செய்தி தொடர்பாளர் மார்கோ மிலிக் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

குரேஷியாவில் 1.23 லட்சம் பேருக்கு கொரோனாத்  தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதோடு  இதுவரை 1,655 பேர் வரை பலியாகியுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.