அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் உலகம் மதிக்கும் ஒரு தலைவராக இருப்பார் என கமலா ஹாரிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
அமெரிக்காவில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளரான ஜோ பைடன் அமோக வெற்றி பெற்றார். அவர் அடுத்த ஆண்டு ஜனவரி 20-ந்தேதி அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அதேபோல் அமெரிக்காவின் துணை ஜனாதிபதியாக தமிழகத்தை பூர்வீகமாகக் கொண்ட கமலா ஹாரிஸ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் அமெரிக்காவின் ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ள ஜோ பைடன் உலகம் மதிக்கும் ஒரு தலைவராக இருப்பார் என கமலா ஹாரிஸ் புகழாரம் சூட்டியுள்ளார்.
இதுகுறித்து அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் “அமெரிக்காவில் சிறந்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஜனாதிபதியாக ஜோ பைடன் இருப்பார். உலகம் மதிக்கும் ஒரு தலைவரை நம் குழந்தைகள் காணப்போகிறது. நாட்டை பாதுகாப்புடன் வழிநடத்தும் படை தளபதியாகவும், அனைத்து அமெரிக்கர்களுக்கான சிறப்பான ஜனாதிபதியாகவும் அவர் திகழ்வார்” என குறிப்பிட்டுள்ளார்.