தமிழ் அரசியல் கைதிகள் யாவரும் விடுவிக்கப்படவேண்டும் – றிசாட்!

314 0

maxresdefault-3-e1481085830493யுத்த நேரத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு உதவினார்கள் என்ற பெயரில் நீண்ட காலமாகத் தடுத்துவைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுதலைசெய்ய நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றிணையவேண்டுமென கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் றிசாட் பதியுதீன் வலியுறுத்தியுள்ளார்.

நேற்று நாடாளுமன்றத்தில் நடைபெற்ற சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சிற்கு 2017ஆம் வரவுசெலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்டுள்ள நிதிதொடர்பான விவாதத்தின்போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

விடுதலைப்புலிகளுக்கு உணவுப் பொதிகளை வழங்கினார்கள் போன்ற அற்ப காரணங்களுக்காக பல தமிழ் இளைஞர்கள் தசாப்தகாலங்களாக சிறைகளில் தமது காலத்தைக் கழிப்பதாகவும், இவர்கள் அனைவருக்கும் விமோசனம் கிடைக்க நாடாளுமன்றத்தில் அனைவரும் ஒன்றிணையவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

அத்துடன் புனர்வாழ்வளிக்கப்பட்டு விடுதலைசெய்யப்பட்ட முன்னாள் போராளிகளுக்கு விசேட வேலைத்திட்டங்களை உருவாக்கி அவர்களின் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை எடுக்கவேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.