எகிப்தில் உள்ள அலெக்சாண்டிரியாவை சேர்ந்த பெண் இமான் அகமது அப்துல்லாதி. 36 வயதான இவர் 500 கிலோ அதாவது அரை டன் உடல் எடையுடன் காணப்படுகிறார்.
இதன் மூலம் உலகின் மிக குண்டான பெண் என கருதப்படுகிறார்.
உடல் எடை தொடர்ந்து அதிகரித்ததால் அவர் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தினார்.
25 ஆண்டுகளாக தொடர்ந்து படுக்கையில் இருக்கிறார்.
உணவு உட்கொள்ளல் உள்ளிட்ட அவரது தேவைகளுக்கு தாயும், தங்கையும் உதவி வருகின்றனர்.
ஆரம்பதில் யானைக் கால் நோய் இவரை தாக்கியது.
அதன் கிருமிகள் உடல் முழுவதும் பரவி எடை அதிகரித்ததாக கூறப்படுகிறது.
இவரது உடலில் உள்ள சுரப்பிகள் சரிவர வேலை செய்யவில்லை அதனால் தான் உடல் மிகவும் குண்டாகிவிட்டது என்றும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், 500 கிலோ எடை கொண்ட கெய்ரோ பெண் இமான் அகமது இந்தியா வருவதற்கு மத்திய வெளியுறவுத் துறை மந்திரி சுஸ்மா சுவராஜ் உதவியுள்ளார்.
கெய்ரோவில் உள்ள இந்திய தூதரகம் மூலம் சுஸ்மா சுவராஜ் இந்த உதவியை செய்துள்ளார்.
முன்னதாக, மும்பையை சேர்ந்த அறுவை சிகிச்சை மருத்துவர், இமான் அகமது இந்தியா வருவதற்கு உதவுமாறு சுஸ்மா சுவராஜை கேட்டுக் கொண்டுக் கொண்டார்.
இதனையடுத்து 500 கிலோ எடை கொண்ட பெண்மணி இந்தியா வருவதற்கு சுஸ்மா சுவராஜ் தலையீட்டை அடுத்து விசா கிடைத்துள்ளது.