உளவு பார்த்த 15 பேருக்கு தூக்கு – சவுதி அரேபியா நீதிமன்றம்

298 0

201612070351061775_saudi-arabia-sentences-15-iranian-spies-to-death_secvpfஈரான் நாட்டிற்காக உளவு பார்த்ததாக 30 பேரை சவுதி அரேபியா காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலுமொரு ஈரான், ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர்களும் இதே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இந்த வழக்கின் விசாரணை சவுதி அரேபியாவில் உள்ள நீதிமன்றம் ஒன்றில் நடைபெற்று வந்தது.
10 மாதங்களாக சுமார் 160 முறை விசாரணை நடைபெற்றது.

இந்த வழக்கில், ஈரான் நாட்டிற்காக உளவு பார்த்த குற்றச்சாட்டில் 15 பேருக்கு தூக்கு தண்டனை விதித்து சவுதி அரேபியா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

மீதமுள்ள 17 பேர் மீதுள்ள குற்றச்சாட்டு குறித்து நீதிமன்றம் இன்னும் எந்தவொரு கருத்தும் தெரிவிக்கவில்லை.

அரசு தரப்பு வழக்கறிஞர்கள் குற்றவாளிகளுக்கு எதிரான ஆதாரங்களை நீதிமன்றத்தில் சமர்பித்ததை தொடர்ந்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.