மெக்சிகோ நாட்டில் போதைப்பொருள் கடத்தல், வழிப்பறி, உள்ளிட்ட வன்செயல்களால் அதிக பாதிப்புக்குள்ளான வெராகுருஸ் மாகாணத்தில் காவல்துறையினருக்கும் ஆயுதம் ஏந்திய நபர்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்பட்டது.
ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் மீது ஆயுதம் ஏந்திய நபர்கள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, காவல்துறையினர் அவர்களுக்கு பதிலடி கொடுத்தனர்.
காவல்துறையினருக்கு ஆதரவாக கடற்படை வீரர்களும் சண்டையிட்டனர்.
இருதரப்புக்கும் இடையே நீண்ட நேரம் துப்பாக்கி சண்டை நடந்தது. இதில் ஆயுதம் ஏந்திய நபர்கள் 14 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.