மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பிரதேசங்களில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை தொடக்கம் பனிமூட்டம் காணப்பட்டது.
இந்தப் பனிமூட்டம் வழமைக்கு மாற்றமாக மலையகத்தைப் போன்று படர்ந்திருந்ததைக் காண முடிந்தது.
சூரியன் உதயமாகி கதிர்கள் பரப்பியிருந்தபோதும் பனிமூட்டம் காரணமாக இருள் கௌவி இருந்ததால் வாகனங்கள் முகப்பு வெளிச்சத்தைப் பாய்ச்சிக் கொண்டே பயணிக்க வேண்டியிருந்தது.
இந்தப் பனி மூட்டம் வெள்ளிக்கிழமை (27) காலை 8 மணி வரை படர்ந்திருந்து மெல்ல மெல்ல அகன்றது.