மட்டக்களப்பில் சோதனை – 2 இலட்சத்து 41ஆயிரம் ரூபா அறவீடு

297 0

65011073img_0059மட்டக்களப்பு மாவட்டத்தில் நவம்பர் மாதம் முதலாம் திகதி தொடக்கம் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இரண்டு இலட்சத்து 41ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதாக மட்டக்களப்பு மாவட்ட மதுவரித் திணைக்களத்தின் பொறுப்பதிகாரி எஸ்.தங்கராஜா தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளிலும் சட்ட விரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் பாவனையை ஒழிக்கும் வகையில் மதுவரித்திணைக்களம் பல்வேறு நடவடிக்கையினை கடந்த ஒரு மாதமாக மேற்கொண்டு வந்தது.

இதனடிப்படையில் கேரளா கஞ்சா விற்பனை செய்தவர்கள், வெளிநாட்டு மதுபானங்களை சட்ட விரோதமாக விற்றவர்கள், வடிசாராயம் விற்றவர்கள், வயது குறைந்தவர்களுக்கு சிகரட் விற்றவர்கள் என 99 பேருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இவர்களில் 58 பேருக்கு நீதிமன்றங்கள் ஊடாக இரண்டு இலட்சத்து 41 ஆயிரம் ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டதுடன், 41 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்வதற்கான நடடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.