சாட்சியங்களை மறைத்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, எதிர்வரும் ஏழாம் திகதி வரை அவர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், ஷானி அபேசேகரவுக்கு பிணையளிப்பதா இல்லையா என எதிர்வரும் ஏழாம் திகதி தீர்ப்பளிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,
ஷானி அபேசேகர, உப பொலிஸ் பரிசோதகர் சுகத் மெண்டிஸ் ஆகியோரின் பிணை மனுக்கள், கம்பஹா மேல் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு வந்த போதே நீதிபதி நிமல் ரணவீர இதனை அறிவித்தார்.
கடந்த நான்கு மாதங்களாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள ஷானி அபேசேகர மற்றும் சுதத் மெண்டிஸ் ஆகியோர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வசந்த நவரத்ன பண்டார மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி சமிந்த அத்துகோரள ஆகியோரும் சட்ட மா அதிபர் திணைக்களம் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஷனில் குலரத்ன ஆகியோரும் வாதங்களை மன்றில் முன்வைத்திருந்தனர்.