உதயங்க வீரதுங்கவின் வழக்கு விசாரணை ஒத்திவைப்பு

418 0

mahindameet_thailand-660x320ரஸ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவின் வங்கிக் கணக்கை முடக்க பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட தீர்மானத்திற்கு எதிராக, முன்வைக்கப்பட்ட அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

உதயங்க வீரதுங்கவின் உறவினர் ஒருவரால் குறித்த மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

அதில், மிக் விமானக் கொள்வனவு தொடர்பில் குறித்த வங்கிக் கணக்கை முடக்க காவல்துறை நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

எனினும் வங்கிக் கணக்கை முடக்க முன்னர் உதயங்ச வீரதுங்கவிடம் எந்தவொரு விசாரணையும் மேற்கொள்ளப்படவில்லை எனவும், அந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

எனவே, உதயங்க வீரதுங்கவின் வங்கிக் கணக்கை முடக்க காவல்துறை நிதி குற்ற விசாரணைப் பிரிவினர் மேற்கொண்ட தீர்மானம் சட்டத்திற்கு முரணானது என உத்தரவிடுமாறும் மனுதாரர் தரப்பில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட வேளை, குறித்த வழக்கின் மேலதிக மன்றாடியார் நாயகம் சுகயீனமுற்றிருப்பதாக அரச தரப்பு வழக்கறிஞர் கூறினார்.

எனவே மனுவை விசாரணை செய்ய வேறொரு தினத்தை வழங்குமாறும் அவர் கோரினார்.

விடயங்களை ஆராய்ந்த பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபவன் தலைமையிலான மூவரடங்கிய நீதியரசர்கள் குழாம், குறித்த மனுவை ஜனவரி 11ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார்.