யாழ்ப்பாண நூலக எரிப்புக்கு முதற்தடவையாக மன்னிப்புக்கோரியது சிறீலங்கா அரசு!

415 0

jaffna-libraryஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சிக்காலத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு, சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றைய தினம் நாடாளுமன்றத்தில் மன்னிப்புக் கோரினார்.

சிறீலங்கா நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற அடுத்த ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே, ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியில் இருந்தவேளை, 1981ஆம் ஆண்டு யாழ்ப்பாண பொது நூலகம் எரிக்கப்பட்டமைக்கு மன்னிப்புக் கோரினார்.

பிரதமரின் உரையின்போது கூட்டு எதிரணியினர் எதிர்ப்புத் தெரிவித்துக்கொண்டிருந்தனர்.

இதன்போது, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாங்கள் மக்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிக்கொண்டிருக்கின்றோம். புதிய தொழில்களை உருவாக்குகின்றோம்.

மைத்திரிபால சிறிசேன ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டு நிறைவடையும்போது வடக்குக் கிழக்கில் வடக்கில் பல அபிவிருத்திப் பணிகளை மேற்கொண்டிருப்போம் எனத் தெரிவித்தார்.