நிவர் புயல் எதிரொலி: 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை

346 0

நிவர் புயல் எதிரொலியாக, 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

வங்கக்கடலில் தீவிர புயலாக உள்ள நிவர் புயல் இன்று பிற்பகலில் அதி தீவிர புயலாக வலுப்பெறும் என்றும், காரைக்கால்-மாமல்லபுரம் இடையே புதுச்சேரிக்கு அருகில் இன்றி நள்ளிரவு முதல் நாளை அதிகாலை வரை கரையை கடக்கும் என்றும், புயலின் தாக்கம் இன்றிரவு முதல் அதிகரிக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிவர் புயல் காரணமாக பலத்த காற்று வீசுவதாலும், கனமழை பெய்வதாலும் பொதுமக்கள் தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்த்து, பாதுகாப்பாக இருக்கும்படி அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் புயலை எதிர்கொண்டு மக்களைக் காக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் அரசு எடுத்து வருகிறது.
இந்நிலையில் நிவர் புயல் எதிரொலியாக, சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகை, திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர், பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நாளை பொது விடுமுறை அளிக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.