மாவீரர் எங்கள் மண்ணின் மூச்சடா !
மாவீரம் எங்கள் மண்ணின் வேரடா !
போராடி எங்கள் ஈழம் வெல்லடா ! – நம்
மாவீரர் தன்னின் பாதை செல்லடா !
ஈழத்தில் அலைமோதும் சுவாசத்தில் உயிராளும்
மாவீரர் மனமாழ்ந்து உரமேற்றுவோம் !
ஓலங்கள் அழிவாகும் காலங்கள் நிலைமாறும்
கோலங்கள் உருமாறும் வழிமாற்றுவோம் !
வீரத்தில் தலைவன் விழியில் !
ஓர்மத்தில் தலைவன் வழியில் !
உருவாகி உரமாகி களமேறி வேரூன்றும்
மாவீரர் ஒளியேற்றுவோம் !
எமக்காவே உயிர்த் தீ மூட்டினீர் !
பகைமாளவே கொடும் புலியாகினீர் !
சென்னீரில் மூழ்கும் போதும் அரணாகினீர் !
கண்ணீரை மாற்றும் எங்கள் அறமாகினீர் !
போராடும் போதும் எங்கள் நினைவேந்தினீர் !
வேரோடும் மண்ணில் எங்கும் உரமூட்டினீர் !
தேசத்தின் காதல் வந்து நெஞ்சோடு சேர !
பாசத்தின் எல்லை ஓங்கி மனதோடு மூழ்க !
யோகத்தின் மூச்சில் நின்று உருவேறி ஆட !
யாகத்தின் ஆழம் தன்னில் பகையாவும் மாழ !
அனலாய் ! புயலாய் ! உரமாய் !உருவாய் !
உயிரீந்து மண்ணில் ஆழ்ந்த மாவீர்
உயிராயுதம் கொண்டு தடை நீக்கினீர் !
அறிவாயுதம் தன்னின் விடையாகினீர் !
கடலாடி அலையின் மீதில் வெடியாகினீர் !
கனவான ஈழம் காண விண்ணேறினீர் !
கருவாகும் ஈழம் தன்னில் உருவேற்றினீர் !
திருவாகி மண்ணில் ஆழ்ந்து உரமாகினீர் !
ஈழத்தின் மூச்சில் நின்று போராட்டம் வெல்ல !
வையத்தின் வீச்சில் வந்த வேரோட்டம் கருக !
நெஞ்சுக்குள் ஆழும் எங்கள் மாவீரம் ஒங்க !
வஞ்சத்தில் ஆளும் கடும் பகையாவும் அழிய !
அறமாய் ! அறிவாய் !விறலாய் ! வீறாய் !
ஈழத்தின் மண்ணைக் காக்கும் மாவீரரே !
தலைநகர் தந்த கவி.
|
|
|
|