ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கினார் மைத்திரி!

287 0

கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பாக சாட்சிய பதிவுகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்குவதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையாகியிருந்தார்.

ஏழாவது தடவையாகவும் இன்று முன்னிலையாகியிருந்த அவர் தற்போது அங்கிருந்து வெளியேறியுள்ளார்.

இதேவேளை, மைத்திரிபால சிறிசேனவை நாளைய தினமும் குறித்த ஆணைக்குழுவில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.