சிறிலங்காவில் மேலும் 287 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இவ்வாறு, தொற்று கண்டறியப்பட்டவர்கள் அனைவரும் ஏற்கனவே தொற்று கண்டறியப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, மினுவாங்கொட மற்றும் பேலியகொட மீன் சந்தை கொரோனா கொத்தணியில் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 17 ஆயிரத்தைக் கடந்து 17 ஆயிரத்து 265ஆக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், சிறிலங்காவில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 20ஆயிரத்து 795ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து இன்று மட்டும் 465 பேர் வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில் இதுவரை 14 ஆயிரத்து 962பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர்.
இந்நிலையில், இன்னும் ஐயாயிரத்து 743 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற்று வருகின்றனர்.
இதேவேளை, சிறிலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றினால் 90 பேர் மரணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.