நாட்டில் கொரோனா தொற்று சுமூகமான நிலையை அடைந்துள்ளது என உறுதியாகக் கூற முடியாது என சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் மற்றும் மக்களின் ஒத்துழைப்பின் அடிப்படையிலேயே வைரஸ் கட்டுப்படுத்தப்பட்டுள்ளமை குறித்து உறுதியாகக் கூற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்தபோதே அவர்இவ்வாறு கூறினார்.
மேலும் நாளொன்றுக்கு அடையாளம் காணப்படும் நோயாளிகளில் பெருமளவானோர் மேல் மாகாணத்திலும் குறிப்பாக கொழும்பு மாவட்டத்திலுமே அடையாளம் காணப்படுகின்றனர் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போது ஏனைய பிரதேசங்களில் குறைந்தளவான நோயாளிகளே அடையாளம் காணப்படுகின்றபோதும் எதிர்வரும் நாட்களில் அதிகளவான பரிசோதனைகளை முன்னெடுப்பதே தமது இலக்கு என்றும் சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் குறிப்பிட்டார்.