ஞானசார தேரரை உடன் கைது செய்ய கோரிக்கை

373 0

mujeebur-rahmanமக்களிடையே இனமுறுகலை ஏற்படுத்தி வன்முறையைத் தூண்டும் வகையில் செயற்படும் பொதுபலசேனா அமைப்பின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை உடன் கை செய்யுமாறு நாடாளுமன்ற உறுப்பினர் முஜீபுர் றஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக்காலத்தில் ஆரம்பமான பொதுபலசேனா அமைப்பு, முஸ்லிம்களுக்கெதிரான மிக மோசமான வன்முறைகளை அரங்கேற்றியது.
மஹிந்த அரசு பொதுபலசேனாவின் இந்த மோசமான செயற்பாட்டை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது மட்டுமல்லாமல் அவர்களின் இனவாத வன்முறை செயற்பாட்டுக்கு மறைமுகமாக அங்கீகாரத்தையும் வழங்கியது.

முஸ்லிம்களுக்கு பலத்த சேதங்களையும், அழிவுகளையும் ஏற்படுத்திய அளுத்கம, பேருவளை கலவரங்களுக்கு காரணகர்த்தாவாகிய ஞானசார தேரர்மீது அப்போதைய மஹிந்த அரசு எவ்வித சட்ட நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

கைது செய்யப்படுவதற்கான தகுந்த ஆதாரங்கள் இருந்தும், ஞானசார தேரர் அன்று கைது செய்யப்படவுமில்லை.

இன்று கூட ஞானசார தேரருக்கு எதிராக பல முறைப்பாடுகள் காவல்துறையிடம் பதியப்பட்டு வருகின்றன.

எனினும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

காவல்துறையின் இந்த செயற்பாடு, சட்டத்தின் நம்பகத்தன்மை நாளுக்கு நாள் நலிவடைந்து வருவதையே எடுத்துக்காட்டுகிறது எனவும் முஜீபுர் றஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.