கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏதேனும் நோய் நிலைமை அல் லது சிக்கல் ஏற்பட்டால் வீடுகளில் தங்கியிராது சிகிச்சை களுக்காக வைத்தியசாலைக்குச் செல்லுமாறு குடும்பநல விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா அறிவுறுத்தலை வழங்கியுள்ளார்.
கொவிட்- 19 கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரண மாக மேல் மாகாணம் உள்ளிட்ட சில பகுதிகள் தனிமைப் படுத்தப்பட்டுள்ள நிலையில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏதேனும் நோய் நிலைமை அல்லது சிக்கல் ஏற்பட்டால் வீடுகளில் தங்கியிராது சிகிச்சைகளுக்காக வைத்திய சாலைக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
குறித்த பிரதேசங்களிலுள்ள கர்ப்பிணிப்பெண்களுக்கு ஏதேனும் அவசர நிலைமை ஏற்பட்டால் தங்களுக்கு வழங் கப்பட்டுள்ள புத்தகத்தினை பயன்படுத்தி உடனடியாக வைத்தியசாலைக்குச் செல்ல முடியும்.
எனவே, வீடுகளில் தங்கியிராது தங்களுக்கான சிகிச்சை களைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என குடும்பநல விசேட வைத்தியர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.