முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கும், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையிலான ஒரு முக்கிய சந்திப்பு நேற்று மாலை இடம்பெற்றது.
கொவிட் -19 கொரோனா தொற்று உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் கடுமையான பேரழிவாக மாறிவரும் ஒரு நேரத்தில் கொரோனா தொற்று நோயால் ஏற்படும் சவால்கள் மற்றும் அவற்றை எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்தும் இந்தச் சந்திப்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கைக்குப் பொருத்தமான தேசிய சுற்றுச்சூழல் கொள்கையை வகுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் உலகெங்கிலும் ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றம் குறித்தும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் பரஸ்பரம் கருத்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.