சுவாதியை கொலை செய்த ராம்குமார் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றதால், அவருக்கு தற்போது சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இன்னும் 2 நாளில் அவனை புழல் சிறைக்கு மாற்ற போலீசார் திட்டமிட் டுள்ளனர்.
சுவாதியை கொலை செய்தது ஏன் என்பதற்கான காரணத்தை ராம்குமார் ஏற்கனவே போலீசாரிடம் வாக்குமூலமாக கூறி விட் டான். எனவே சுவாதி கொலை வழக்கை மிக விரைவில் நடத்தி முடித்து விட சென்னை போலீசார் முடிவு செய்துள்ளனர். அதிகபட்சமாக மூன்று வாரங்களுக்குள் தேவை யான ஆதாரங்கள், ஆவணங் களைத் திரட்டி அதை தொகுத்து அறிக்கையாக கோர்ட்டில் சமர்ப்பிக்க போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர்.
இந்த வழக்கில் சாட்சிகள் மற்றும் ஆதாரங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கும் என்பதால் அவை சேகரிக்கப் பட்டு வருகிறது. சுவாதியை கொலை செய்ய ராம்குமார் பயன் படுத்திய அரிவாளில் படிந்த ரத்தம் ஏற்கனவே சேகரிக் கப்பட்டுள்ளது. அதுபோல ராம்குமாரின் சட்டையில் படிந்திருந்த ரத்த துளிகளும் சேகரிக்கப்பட்டுள்ளது. அவை ஐதராபாத்தில் உள்ள சோதனை கூடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள் ளது.
அந்த ரத்தத்தை கொண்டு மரபணு சோதனை நடத்தப்படும். அதில் சுவாதியை வெட்டி கொன்றது ராம்குமார் தான் என்பது அறிவியல் பூர்வ மாக துல்லியமாக உறுதிப் படுத்தப்படும். எனவே டி.என்.ஏ. பரிசோதனை அறிக்கை இந்த கொலை வழக்கில் மிக முக்கியமான தாக கருதப்படுகிறது.
டி.என்.ஏ. பரிசோதனை மட்டுமின்றி தடயவியல் சோதனையும் இந்த வழக்கில் போலீசாருக்கு கை கொடுப்பதாக உள்ளது. இவை தவிர சாட்சிகளையும் போலீசார் திரட்டி வருகிறார்கள். சுவாதி கொலையை நேரில் பார்த்தவர்கள், ராம் குமாரை நேரில் பார்த் தவர்கள் பட்டியல் தயாரிக் கப்பட்டுள்ளது. ராம்குமார் தங்கியிருந்த மேன்சனில் உள்ள சிலரும் சாட்சிகள் பட்டியலில் சேர்க்கப்பட உள்ளனர்.இத்தகைய ஆதாரங்கள் மூலம் ராம்குமாருக்கு விரை வில் அதிகபட்ச தண்டனை வாங்கிக் கொடுக்க முடியும் என்று போலீசார் நம்பிக்கை யுடன் உள்ளனர்.