முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு அமெரிக்கா திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த கலந்துரையாடலுக்காக அமெரிக்க அரசாங்கம் முயற்சி மேற்கொண்டு வருவதாக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இந்த நாட்டில் உள்ள அமெரிக்க தூதரக அலுவலகத்தின் ஊடாக இந்த கலந்துரையாடல் மேற்கொள்வதற்கு ஆயத்தமாகுவதாக அந்த தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ளப்படவுள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.