மாந்தை மேற்கில் கொலை செய்யப்பட்ட கிராம அலுவலர் தொடர்பான வழக்கு, இன்று திங்கட்கிழமை மன்னார் நீதிமன்றத்தில் மன்னார் நீதவான் எம்.கணேசராஜா முன்னிலையில் விசாரணைக்காக எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன் போதே சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
அதன் போது இன்றைய தினம் குற்றப்புலனாய்வு பிரிவினர் குறித்த வழக்கை பாரமெடுத்துள்ளனர்.
குறித்த வழக்கு விசாரணை பொலிஸாரிடம் இருந்து சி.ஐ.டிக்கு மாற்றப்பட்டுள்ளது.
அவர்கள் சிறைச்சாலையிலுள்ள தற்போதைய சந்தேக நபராக தடுத்து வைக்கப்பட்டுள்ள நபரை விசாரணை செய்வதற்காக சிறைச்சாலை உத்தியோகத்தர் ஊடாக ஒரு கட்டளையைப் பெற்றுள்ளனர்.
மேலும் சிலருடைய வாக்குமூலங்களைப் பெற்றுக்கொள்வதற்கும் சிலருடைய வங்கிக் கணக்கு விபரங்களைப் பெற்றுக் கொள்ளுவதற்குமான கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை குறித்த சந்தேக நபரை எதிர்வரும் 7 ஆம் திகதி (7-12-2020) வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டார்.