மண்காக்கும் தெய்வங்கள் !தலைநகர் தந்த கவி,

452 0
மண்காக்கும் தெய்வங்கள் மலரடி தொழுதாலே
மனமெங்கும் உருவேறி உணர்வேறும்  -ஈழ
மண்காக்க உயிரீந்தோர் சரிதத்தை உணர்ந்தாலே
உளமெங்கும் வீரத்தின் பலமேறும்
ஈழத்தை காத்திடும் காவல் தெய்வங்கள்
ஈழத்தின் உயிர்ப்பிலே வாழுகிறார்  -இந்த
ஞாலத்தில் தோன்றிடும் ஈழத்தின் பகைதனை
காலத்தின் வேலினால் அழித்திடுவார்
கருந்துளை வடிவாகி உலகமே சூழ்ந்தாலும்
ஈழத்தின் மூச்சாகி எழுந்திடுவார்  -நாம்
சோர்ந்திடும் போதிலும் தாழ்ந்திடும் போதிலும்
சக்தியின் வீச்சாகி காத்திடுவார்
உலகத்தின் நிகழ்விலே சிக்கிய ஈழத்தை
உலகத்தின் கைகொண்டு மீட்டிடுவார்  -நம்
உன்னதத் தலைவரின் தொலைதூரப் பார்வையின்
முடிச்சிலே விடையாகி வெளிவருவார்
இயற்கையின் சுழட்சியின் மாற்றத்தின் வழியிலே
ஈழத்தின் கொடியாகி வீசிடுவார்  -தமிழ்
ஈழத்தின் வடிவினை உலகத்தின் பதிவிலே
ஊன்றியே பேரொளி பரப்பிடுவார்.
தலைநகர் தந்த கவி