முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவையடுத்து, இன்று ஒரு நாள் துக்கம் அனுஸ்டிக்கப்படும் என மத்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.
சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் 22ஆம் திகதி முதல் கடந்த 75 நாள்களாக சிகிச்சை பெற்று வந்த முதல்வர் ஜெயலலிதாவுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் திங்கள்கிழமை இரவு 11.30 மணிக்கு முதல்வர் ஜெயலலிதா இறந்துவிட்டார் என அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அறிவித்தது.
அதன்பின்னர் அவரது உடலுக்கு இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு, சென்னை ராஜாஜி அரங்கில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், தமிழக முதல்வரின் மறைவையடுத்து, 7 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என தமிழக அரசு அறிவித்தது.
அதேபோல், பள்ளி, கல்லூரிகளுக்கும் மூன்று நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.