தமிழ் இனத்தின் வீரர்களை நினைவு கொள்வதை தடுக்க முடியுமா?-உறவுகள்

307 0

தமிழ் இனத்தின் தேசிய வாழ்வு நிலைப்பதற்காகத் தமது சொந்த வாழ்வை ஈகம் செய்த சுதந்திர வீரர்களை நினைவு கொள்வதை தடுக்க முடியுமா? என வடக்கு கிழக்கு வலிந்து காணாமலக்கப்பட்டோரின் உறவுகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

மேலும் எங்கள் பிள்ளைகளை நாங்கள் நினைவிற்கொள்வதை எவரும் தடுக்கமுடியாது எனவும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அமைப்பின் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் பணிப்பாளர் திருமதி பத்மநாதன் கருணாவதி தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்கள் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

நினைவேந்தலை அரசியலாக்கி, அதனூடாக குளிர்காய்வதற்கு இடமளிக்காது வடக்கு கிழக்கில் வாழ்கின்ற அனைத்து தமிழ் உறவுகளும் தங்கள் தேசத்துக்காக உயிர் கொடுத்த உறவுகளை நவம்பர் 27ஆம் திகதி நினைவு கூறுவது ஒவ்வொரு தமிழர்களின் தார்மீக கடயையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டில் உள்ள கொரோனா வைரஸ் தொற்றினை கருத்திற்கொண்டு பொது சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி துயிலும் இல்லங்களில் மீளாத்துயிலில் இருக்கும் தத்தமது உறவுகளுக்கு, விளக்கேற்றி வணக்கம் செலுத்த முன்வரவேண்டும் எனவும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவுகள் அமைப்பின் சார்பாக வேண்டி நிற்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.