கூட்டு எதிர்க்கட்சிக்குள் பசிலுக்கு கடும் எதிர்ப்பு!

319 0

download-4முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தலைமைத்துவத்திலான கூட்டு எதிர்க்கட்சிக்குள் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

பத்தரமுல்லை, நெழும் மாவத்தை இணைப்பு அலுவலகத்தில் இடம்பெற்ற கூட்டு எதிர்க்கட்சி கூட்டத்தில் பசில் ராஜபக்சவின் செயற்பாடு தொடர்பில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த குழு பிளவடைந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

புதிய கட்சியை உருவாக்கி பசில் ராஜபக்ச மேற்கொள்கின்ற செயற்பாடு, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களினால் கடும் விமர்சனத்திற்கு உட்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த செயற்பாடுகளை மாற்றிக் கொள்வதற்கு பசில் தரப்பினர் இணங்காமையின் காரணமாக இந்த பிளவு ஏற்பட்டுள்ளது.

ஜீ.எல்.பீரிஸை முன் வைத்து புதிய கட்சி ஒன்றை உருவாக்கி அதற்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உள்ளூராட்சி மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களை தொடர்புப்படுத்திக் கொண்டு கட்சியை பிளவுபடுத்துவதற்கு பசில் ராஜபக்ச செயற்படுவது தங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் எனவும், அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறான செயற்பாடுகளின் காரணமாக தங்கள் கட்சி பிளவடைவதாக குற்றம் சுமத்தப்படுகின்றதென அந்த தரப்பினர் சுட்டிக்காட்டியுள்ளனர். எப்படியிருப்பினும் புதிய கட்சியின் செயற்பாடுகளை நிறுத்துவதற்கு பசில் ராஜபக்ச உட்பட குழுவினர் இணங்காத நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஆதரவும் அந்த குழுவுக்கே கிடைத்துள்ளது.

புதிய கட்சியில் தாங்கள் ஒரு போதும் தொடர்புப்படுவதில்லை எனவும், ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை விட்டு சென்று அனாதையாகுவதற்கு தாங்கள் ஒரு போதும் தயாரில்லை என சுதந்திர கட்சி உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். எனவே அந்த குழு பிளவடைவது உறுதி என கட்சித் தகவல்களின் அடிப்படையில் குறித்த ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கூட்டு எதிர்கட்சியாக செயற்படுவதற்கு இணைந்த உறுப்பினர் குழுவில் இருந்த பிரபல நபர்கள் ஆரம்பத்தில் இருந்தே பசில் ராஜபக்சவின் செயற்பாட்டிற்கு எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

மஹிந்தவின் தேர்தல் தோல்விக்கு பசில் தான் காரணம் என பலரினால் குற்றம் சுமத்தப்பட்டது. அவரது செயற்பாட்டினால் ராஜபக்ச அரசாங்கம் சிரமத்திற்குள்ளாகியதாக குற்றம் சுமத்தப்பட்டது.

எப்படியிருப்பினும் தொடர்ந்து பசில் ராஜபக்சவை பாதுகாப்பதற்கே செயற்பட்டுள்ளார். இது மீண்டும் குடும்ப ஆட்சி தலைதூக்கும் நடவடிக்கைக்கு ஆரம்பம் என கடுமையாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதனால் அந்த கட்சியின் பிளவை தடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.