மைத்திரிபால சிறிசேன மார்ச் மாதம் ரஷ்யாவிற்குப் பயணம்

323 0

10561811_10153891741931327_8157193597005581823_n-450x285சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன அடுத்த ஆண்டு மார்ச் மாதம் ரஷ்யாவிற்குப் பயணம் செய்யவுள்ளார்.

அடுத்த வருடம் மார்ச் மாதம் 23ஆம் திகதி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை ரஷ்யத் தலைநகர் மொஸ்கோவில் சிறீலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன சந்தித்துப் பேச்சு நடாத்தவுள்ளார் என ரஷ்ய தூதுவர் லெக்சான்டர் கர்சாவா தெரிவித்தார்.

சிறீலங்கா – ரஷ்யா தொடர்பான இருதரப்பு உறவுகள் தொடர்பாக நேற்றைய தினம் கொழும்பிலுள்ள ரஷ்யத் தூதரகத்தில் விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் தெரிவிக்கையில், சிறீலங்காவின் பாதுகாப்புத் தேவைக்கான தளபாடங்களை ரஷ்யாவினால் நிறைவேற்றமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன், உலகத்தில் ரஷ்ய பாதுகாப்புத் தளபாடங்களே தரமானவை எனவும் தெரிவித்த அவர், ரஸ்யாவின் ஆயுத தளபாடங்களை ஏனைய நாடுகளின் தயாரிப்புகளுடன் ஒப்பிடுவதற்கும் அவர் மறுத்துள்ளார்.