பியர்ல் ஹார்பர் நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த அமெரிக்கா வருகிறார் ஷின்சோ அபே

344 0

_92837116_gettyimages-534700226பியர்ல் ஹார்பர் மீது ஜப்பான் நடத்திய தாக்குதலை குறிக்கும் வகையில் ஹவாய் தீவில் வைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்திற்கு செல்லும் முதல் ஜப்பானிய பிரதமர் என்ற பெருமையை பெறுகிறார் ஷின்சோ அபே.

அதிபர் ஒபாமாவுடன் இந்த மாத இறுதியில் அவர் அங்கு செல்ல உள்ளார்.கடந்த மே மாதம் ஹிரோஷிமாவிற்கு அதிபர் ஒபாமா பயணம் மேற்கொண்டிருந்தார். அதனைத் தொடர்ந்தே, ஜப்பானிய பிரதமரின் இந்த முடிவு வெளிவந்துள்ளது.

1945ல் அமெரிக்க வீசிய அணு ஆயுத குண்டை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையேயான உறவு தீவிரமாக மோசமானது.75 ஆண்டுகளுக்குமுன் புதன்கிழமையன்று பியர்ல் ஹார்பர் துறைமுகம் மீது ஜப்பான் தாக்குதல் நடத்தியது. அதில், சுமார் இரண்டாயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.இந்த்த் தாக்குதல் அமெரிக்காவை இரண்டாம் உலகப்போருக்குள் கொண்டுவந்தது.கடந்த ஆகஸ்ட் மாதம் பியர்ல் ஹார்பர் நினைவிடத்தில் அபேவின் மனைவி அஞ்சலி செலுத்தியிருந்தார்.