இலங்கையின் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள் ஒருபோதும் தீர்வு காண முடியாது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ், முஸ்லிம் மக்களுக்கான வாழ்வியல் பிரச்சினைகள் தனித்துவமானவை.
நாம் வடக்கு, கிழக்கில் எதிர்நோக்கும் பிரச்சனைகள் ஏனைய மாகாண மக்களுக்கு இல்லாதவை என்பதை முதலில் இந்த நாடாளுமன்றம் உணர்ந்துகொள்ள முன்வர வேண்டும்.
அதுதான் தமிழர்களுக்கான இனப்பிரச்சினையாக உருவெடுத்தது என்பதையும் சிவமோகன் சுட்டிக்காட்டியுள்ளார்.