சாவகச்சேரியில் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றாத திருமணம் – கலந்துகொண்டவர்கள் தனிமைப்படுத்தல்

350 0

யாழ். சாவகச்சேரிப் பகுதியில் சுகாதார நடைமுறைகளை மீறி நடந்த திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களைத் தனிமைப்படுத்த சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

சாவகச்சேரியில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றுக்கு 50 பேர் மாத்திரமே பங்கேற்க முடியும். வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர் கலந்து கொள்ள முடியாது. சுகாதார நடைமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என்ற நிபந்தனைகளுடன் அனுமதி வழங்கப்பட்டது.

இருப்பினும் அதனை மீறி திருமண நிகழ்வில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்நிலையில் உரியசுகாதார நடைமுறைகளைப் பின்பற்றத் தவறிய திருமண வீட்டாரையும், திருமண நிகழ்வில் கலந்துகொண்டவர்களையும் தனிமைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ள்ளது என சுகாதாரப் பிரிவினர் தெரிவித்தனர்.