நாடாளுமன்றம் ஒரு அரசியல் சாசன சபையாக மாற்றப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் வைத்து அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
அரசியல் சாசன சபையில் ஒரு விவாதம் நடைபெறவுள்ளது.
எம்மை பொறுத்தவரை பிளவு படாத, பிரிக்க முடியாத ஒரு நியாயமான அரசியல் தீர்வை எதிர்பார்க்கிறோம்.
எமது மக்களின் இறைமையின் அடிப்படையில் அமைக்கப்பட வேண்டும். இறைமை என்பது எல்லோருக்கும் சமமாக இருக்க வேண்டும் எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.