ரஸ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க ஒரு கொலையாளி இல்லையென்றும் அவர் ரஸ்யாவில் இருந்து எச்சந்தர்ப்பத்திலும் ஆயுதங்களைக் கடத்தவில்லையெனவும் இலங்கைக்கான ரஸ்ய தூதுவர் அலெக்சாண்டர் கர்ச்சவா தெரிவித்தார்.
கொழும்பில் உள்ள ரஸ்யத் தூதரகத்தில் செய்தியாளர்களை சந்தித்த தூதுவர் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார்.
இலங்கை ஊடகங்களிலேயே அவர் ஒரு கொலையாளியென பிரசுரம் செய்யப்படுகின்றன.
அவர் மீது கொலைக்குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளது.
ஆனால் அவருக்கும் அந்த கொலைக்கும் எவ்வித தொடர்பும் இல்லை’ என்றும் ரஸ்ய தூதுவர் அலெக்சாண்டர் கூறினார்.