நாடாளுமன்ற பேரவை சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் நாளை (திங்கட்கிழமை) மாலை 4 மணிக்கு நாடாளுமன்றத்தில் கூடவுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் வெற்றிடங்களுக்காக கோட்டாபாய ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள பரிந்துரைகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் பதவிக்கு மேற்கொள்ளப்பட்டுள்ள நியமனம் என்பன குறித்து இதன்போது பரிசீலிக்கப்படவுள்ளன.
மஹிந்த ராஜபக்ஷ, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, டக்ளஸ் மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் கபீர் ஹஷீம் ஆகியோர் நாடாளுமன்ற பேரவையில் அங்கம் வகிக்கின்றனர்.
நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க அதன் செயலாளராக பதவி வகிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.