தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இந்திய பிரதமர் மோடி, தனது இரங்கலை ட்விட்டர் தளத்தில் தெரிவித்து இருக்கிறார்.
‘செல்வி ஜெயலலிதாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. இந்திய அரசியலில் ஒரு பெரும் வெற்றிடத்தை உருவாக்கிவிட்டார் ஜெயலலிதா.
மக்களுக்காகவே யோசிப்பது, பெண்களுக்காக போராடுவது, ஏழைகளின் நலனுக்காகவே சிந்தித்தது போன்றவை எனக்கு மிகவும் ஊக்கம் அளித்தது.
இந்த துயரமான சம்பவத்தில், எனது எண்ணங்களும், ஆறுதல்களும், தமிழக மக்களுடன் இருக்கும்.
இந்த பெரும் துயரில் இருந்து அனைவரும் மீள எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன். அவரை பல சமயங்களில் சந்தித்த தருணங்களை நினைவு கூர்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன் ‘ என ட்விட் செய்து இருக்கிறார்.