தமிழகம்- ஆந்திரா இடையே பஸ் போக்குவரத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் இருந்து வெளி மாநிலங்களுக்கு பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தன.
ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநிலங்களில் கொரோனா அதிக அளவில் இருந்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாநில எல்லைகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் தீவிர பரிசோதனை முகாம்களை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வெளி மாநிலங்களுக்கு பஸ்களை இயக்க வேண்டும் என்று அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.
இதைத்தொடர்ந்து தமிழகம்- ஆந்திரா இடையே பஸ் போக்குவரத்தை தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. வருகிற 25-ந்தேதி முதல் இரு மாநிலங்களுக்கும் இடையே பயணிக்க ‘இ-பாஸ்’ தேவை இல்லை என்று தலைமை செயலாளர் சண்முகம் அரசாணை வெளியிட்டுள்ளார்.
தமிழகத்திற்குள் ஏற்கனவே பஸ் போக்கு வரத்து நடைபெற்றுவரும் நிலையில் தற்போது ஆந்திர மாநிலத்துக்கு 25-ந்தேதி முதல் பஸ் போக்குவரத்து தொடங்க இருப்பதால் பயணிகள் முன் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.