மருந்து நிறுவனங்கள் மீது டொனால்ட் ட்ரம்ப் குற்றச்சாட்டு!

319 0

தேர்தலில் எனக்கு எதிராக மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்கில் விளம்பரங்கள் செய்தன என  டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump)  குற்றஞ்சாட்டியுள்ளார்

உலகளவில் பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்திய அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் கடந்த 3ஆம் திகதி நடைபெற்றது.

இதில் ஜனநாயக கட்சி வேட்பாளராக போட்டியிட்ட ஜோ பைடன், தற்போதைய ஜனாதிபதியும், குடியரசு கட்சி வேட்பாளருமான டொனால்ட் ட்ரம்பை வீழ்த்தி அபார வெற்றி பெற்றார்.

எனினும் தனது தோல்வியை  ஏற்றுக்கொள்ளதாக ட்ரம்ப் ஜனாதிபதி தேர்தலில் மோசடி நடந்துள்ளதாக குற்றம் சாட்டி வருகிறார்.

அந்த வகையில் நேற்று முன்தினம் வெள்ளை மாளிகையில்  ஊடகவியளாலர்களை சந்தித்த அவர் ”தனக்கு எதிராக முன்னணி மருந்து நிறுவனங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்ததாக புதிய குற்றச்சாட்டை சுமத்தினார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில் ”பெரிய மருந்து நிறுவனங்கள் எனக்கு எதிராக செயற்பட்டுள்ளன. எனக்கு எதிரான விளம்பரங்களுக்காக அவை கோடிக்கணக்கில் செலவு செய்துள்ளன. நான்தான் இந்த தேர்தலில் வெற்றி பெற்றேன். கிட்டத்தட்ட 7 கோடியே 40 லட்சம் வாக்குகளை நாங்கள் கண்டுபிடிப்போம்.

எங்களுக்கு எதிராக மருந்து தொழில் நிறுவனங்கள் செயற்பட்டன. ஊடகங்கள் எங்களுக்கு எதிராக இயங்கின. எங்களுக்கு எதிராக நேர்மையற்ற செயல்கள் நிறைய நடந்தன. இதுபோன்று நான் பார்த்ததே இல்லை.இவ்வாறு அவர் தெரிவித்தார்.