புதுச்சேரியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

410 0

201612060329002329_schools-colleges-leave-for-puducherry-today_secvpfஜெயலலிதா மறைவை தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் இன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அப்பல்லோ மருத்துவமனையில் கடந்த 70 நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா நேற்று இரவு 11.30 மணியளவில் காலமானார். ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து, தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாட்களுக்கு அனைத்து தனியார் மற்றும் அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழகத்தில் 7 நாட்கள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஜெயலலிதா மறைவை தொடர்ந்து, புதுச்சேரி மாநிலத்தில் இன்று பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஜெயலலிதாவின் மறைவிற்கு புதுவை முதல்-மந்திரி நாராயணசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் ஒரு நாள் அரசு சார்பில் துக்கம் அனுசரிக்கப்பட உள்ளதாக கூறினார்.

மேலும், மத்திய அரசு எத்தனை நாள் துக்கம் அனுசரிக்கிறதோ, அத்தனை நாட்கள் புதுச்சேரி அரசும் அனுசரிக்க தயாராக உள்ளதாக தெரிவித்தார்.