எம்.ஜி.ஆர் சமாதியில் ஜெயலலிதா உடல் நல்லடக்கம்

471 0

201612060344208744_jayalalithaa-body-to-be-burial-in-chennai-marina-mgr_secvpfஉடல்நலக் குறைவால் உயிரிழந்த ஜெயலலிதாவின் உடல், மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் நல்லடக்கம் செய்யப்பட உள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதா சிகிச்சை பலனின்றி நேற்றிரவு(திங்கட்கிழமை) 11.30 மணியளவில் உயிரிழந்தார். இதயம் செயலிழந்ததை அடுத்து அவர் உயிர் பிரிந்ததாக அப்பல்லோ நிர்வாகம் தரப்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, மறைந்த ஜெயலலிதாவின் உடல் அப்பல்லோ மருத்துவமனையில் இருந்து பலத்த பாதுகாப்புடன் போயஸ் கார்டன் இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இதனிடையே, சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக ஜெயலலிதாவின் உடல் இன்று வைக்கப்படுகிறது. பின்னர் இன்று மாலை 4.30 மணியளவில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். சமாதி வளாகத்தில் ஜெயலலிதாவின் உடல் முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவிற்கு அஞ்சலி செலுத்துவதற்காகவும், நல்லடக்க நிகழ்விலும் ஏராளமான மக்கள் கலந்து கொள்வார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றது.