அ.தி.மு.க. மகளிரணி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தை மாவட்ட வாரியாக தமிழ்நாடு முழுவதும் நடத்த அ.தி.மு.க. பொதுச் செயலாளர் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதை முன்னிட்டு அ.தி.மு.க. அரசின் வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளை பட்டிதொட்டி முழுவதும் பரப்பவும், மகளிரணியில் மேலும் பெண்களை சேர்க்கவும் கட்சி பணிகளை முடுக்கி விடவும் வருகிற 8-ந் தேதியில் இருந்து 23-ந் தேதி வரை மகளிர் அணி நிர்வாகிகளின் கூட்டங்கள் கீழ்க்கண்ட தேதிகளில் மாவட்ட வாரியாக நடைபெறுகிறது.
8-ந்தேதி – சிவகங்கை, ராமநாதபுரம்.
9-ந்தேதி – விருதுநகர், தூத்துக்குடி.
10-ந்தேதி – திருநெல்வேலி மாநகர், திருநெல்வேலி புறநகர்.
11-ந்தேதி – தேனி, திண் டுக்கல்.
12-ந் தேதி – ஈரோடு மாநகர், ஈரோடு புறநகர்.
13-ந் தேதி – நீலகிரி.
16-ந்தேதி – கோவை மாநகர், கோவை புறநகர், திருப்பூர் மாநகர், திருப்பூர் புறநகர்.
17-ந் தேதி – மதுரை மாநகர், மதுரை புறநகர்.
23-ந் தேதி – வேலூர் கிழக்கு, வேலூர் மேற்கு, திருவண்ணாமலை வடக்கு, திருவண்ணாமலை தெற்கு.
24-ந் தேதி – விழுப்புரம் வடக்கு, விழுப்புரம் தெற்கு, கடலூர் கிழக்கு, கடலூர் மேற்கு.
30-ந் தேதி – வடசென்னை வடக்கு, வடசென்னை தெற்கு, தென்சென்னை வடக்கு, தென்சென்னை தெற்கு.
31-ந் தேதி – திருவள்ளூர் கிழக்கு, திருவள்ளூர் மேற்கு, காஞ்சீபுரம் கிழக்கு, காஞ்சீபுரம் மத்தியம்.
ஆகஸ்டு 13-ந்தேதி – கரூர், நாமக்கல்.
14-ந்தேதி – சேலம் மாநகர், சேலம் புறநகர்.
16-ந் தேதி – புதுக்கோட்டை, தஞ்சாவூர் வடக்கு, தஞ்சாவூர் தெற்கு.
17-ந்தேதி – அரியலூர், பெரம்பலூர்.
18-ந் தேதி – காஞ்சீபுரம் மேற்கு.
19-ந் தேதி – திருச்சி மாநகர், திருச்சி புறநகர்
20-ந் தேதி – திருவாரூர், நாகப்பட்டினம்.
21-ந்தேதி – தருமபுரி, கிருஷ்ணகிரி.
23-ந்தேதி – கன்னியாகுமரி.
இந்த ஆலோசனை கூட்டங்கள் கழக மகளிர் அணி செயலாளர் விஜிலா சத்தியானந்த் எம்.பி. தலைமையிலும், கழக மகளிர் அணி இணைச்செயலாளர் கீர்த்திகா முனியசாமி உள்ளிட்ட மகளிர் அணி மாநில நிர்வாகிகள் முன்னிலையிலும் நடைபெறும்.
ஆலோசனை கூட்டங்கள் நடைபெற உள்ள மாவட்டங்களை சேர்ந்த, மாவட்ட மகளிர் அணி செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகள், தங்கள் மாவட்டங்களில் அனைத்து நிலைகளிலும் செயல்பட்டு வரும் மகளிர் அணி நிர்வாகிகள் அனைவரும் ஆலோசனை கூட்டங்களில் தவறாமல் கலந்து கொள்ளும் வகையில் உரிய ஏற்பாடுகளை செய்திட வேண்டும்.
இந்த ஆலோசனை கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட கழக செயலாளர்கள் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறி உள்ளார்.