மறைந்த முதல்வரின் உடல் செவ்வாய் காலை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக– ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்பு

426 0

மறைந்த தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா (68) உடல் செவ்வாய்க்கிழமை காலை ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. முன்னதாக அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து போயஸ் தோட்ட இல்லத்துக்கு அவரது உடலை எடுத்துச் செல்ல ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. அப்பல்லோ மருத்துவமனையிலிருந்து போயஸ் தோட்டம் வரை சாலையின் இரு புறங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். போயஸ் தோட்ட இல்லத்தில் முதல்வர் ஜெயலலிதாவின் உடலுக்கு குடும்ப வழக்கப்படி சடங்குகள் செய்து முடிந்த பிறகு, அங்கிருந்து நேராக ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள பழமை வாய்ந்த ராஜாஜி ஹாலில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது.

jayalalithaa_23420

தமிழகத்தில் ஒரு வாரம் – துக்கம்

ஜெயலலிதா இறந்துள்ள நிலையில் தமிழகத்தில் ஒரு வாரம் அரசு முறை துக்கம் அனுசரிக்கப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு வாரத்திற்கு தமிழகத்தில் அரசு நிகழ்ச்சிகள், விழாக்கள் எதுவும் நடைபெறாது. தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஓ.பன்னீர்செல்வம் தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார்.

paneer

ஓ.பன்னீர்செல்வம் 3வது முறையாக தமிழக முதல்வராக பதவியேற்றுள்ளார். ஆளுநர் மாளிகையில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் பன்னீர்செல்வம் பதவியேற்றார்.