அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தனது நூலில் இந்திய தலைவர்களை அவமதித்துள்ளார் என தெரிவித்து இந்திய சட்டத்தரணியொருவர் நீதிமன்றில் மானநஸ்டவழக்கொன்றை தாக்கல் செய்வதற்கான அனுமதியை கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த மூத்த வழக்கறிஞர் கியான் பிரகாஸ் சுக்லா என்பவர் பராக் ஒபாமா காங்கிரஸ் கட்சியின் தலைவர்களான ராகுல்காந்தி மன்மோகன்சிங் ஆகியோரை அவமதித்துள்ளார் என தெரிவித்து மான நஸ்ட் வழக்கொன்றை தாக்கல் செய்துள்ளதுடன் மாநில பொலிஸார் பராக் ஒபாமாவிற்கு எதிராக எவ்ஐஆர் எனப்படும் முதல் தகவல் அறிக்கையை பதிவுசெய்யவேண்டும் என தனது மனுவில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்த வழக்கை விசாரிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதை தொடர்ந்து முதலாம் திகதி விசாரணைகள் ஆரம்பமாகவுள்ளன.
பராக் ஒபாமா ராகுல்காந்தியை பதட்டமானவர் மற்றவர்களை கவரமுயல்பவர் என வர்ணித்துள்ளார், என தனது மனுவில் தெரிவித்துள்ள சட்டத்தரணி மன்மோகன்சிங்கினால் தனது மகனிற்கு ஆபத்தில்லை என்பதாலேயே மன்மோகன் சிங்கினை பிரதமராக சோனியா காந்தி தெரிவு செய்தார் என ஒபாமா குறிப்பிட்டுள்ளார் எனவும் தெரிவித்துள்ளார்.
ஒபாமாவின் இந்த கருத்தினால் இந்தியாவில் அவரைபின்பற்றும் மில்லியன் கணக்கானவர்கள் மனமுடைந்துபோவார்கள் என தெரிவித்துள்ள உத்தரபிரதேஸ் சட்டத்தரணி இந்த நூலிற்கு எதிராக மக்கள் வீதியில் இறங்கினால் பிரச்சினை உருவாகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இதன் காரணமாக இந்தியா பராக்ஒபாமாவிற்கு உத்தியோகபூர்வமான முறைப்பாட்டை தெரிவிக்கவேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.