அல் கொய்தா இயக்கத்தின் தலைவர் அய்மான் அல் ஸவாஹிரி (Ayman al-Zawahiri) உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
2011ல் பின்லேடன் கொல்லப்பட்ட பின்னர் ஸவாஹிரி அல்கொய்தாவின் தலைமைப் பொறுப்பை ஏற்றார். இதனைத் தொடர்ந்து இவரின் தலைக்கு 25 மில்லியன் டொலர்களை விலையாக வைத்தது அமெரிக்கா.
ஆனால் ஆப்கானிஸ்தானில் பதுங்கி வாழ்ந்த அய்மான் அல் ஸவாஹிரி ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் கடும் மூச்சிரைப்பு காரணமாக ஜவாஹிரி உயிரிழந்ததாக பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.