இரும்புப் பெண்மணி மாண்புமிகு அம்மா செல்வி ஜெயலலிதா அவர்களின் இழப்பு உலகத்தமிழருக்கே பேரிழப்பாகும். முதலமைச்சராகப் பதவியில் இருக்கும்போதே அறிஞர் அண்ணா, பொன்மனச்செம்மல் திரு எம்.ஜி.ஆர் இற்குப் பின்பு மறைந்த பெரும் தலைவர் அம்மா அவர்களாவர்.
தமிழீழத் தமிழருக்காகச் சட்டமன்றத்தில் குரல் கொடுத்ததோடு மட்டும் நின்றுவிடாது மிகத் துணிவாக தமிழீழ தாயகத்துக்கான பொது வாக்கெடுப்பு நடாத்தப்படவேண்டுமென்றும், ஈழத்தில் நடந்தது இனவழிப்பே என்;று கூறி ஈழத்தமிழருக்குத் தமிழீழமே தீர்வு என தீர்மானம் நிறைவேற்றிய பெருமைக்குரியவர்.
தமிழகத்தில் அடிமட்ட மக்களுக்கும் பெண்களுக்கும் பல நன்மைபயக்கும் திட்டங்களை அமுல்படுத்திய தன்னிகரற்ற தலைவர் அம்மா ஆவார்.
அம்மாவின் பிரிவால் வாடும் தமிழக மக்களுக்கும், அவரது கட்சித் தொண்டர்களுக்கும் மற்றும் உறவினருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவிப்பதோடு அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம்வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
‘தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.’
-அனைத்துலக ஈழத்தமிழர் மக்களவை-