யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தங்களின் வீடுகளில் நினைவேந்தல்களை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதியளித்துள்ளதாக ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏசுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மாவீரர் நாள் நிகழ்வுகளைத் தடை செய்யக் கூடாது எனக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிமன்றால் தள்ளுபடி செய்யப்பட்டமை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது மேலும் தெரிவிக்கையில், யுத்தத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் தாங்கள் தனியாக நினைவேந்தல்களை செய்வதனை மன்று ஏற்றுகொள்வதாகவும் ஆனால் கூட்டாக சேர்ந்து, மாவீரர் நினைவேந்தல் எனும் அடிப்படையில் செய்வது தேசிய பாதுகாப்புடன் சம்பந்தப்பட்ட விடயமாகும் என அறிவித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.