கூட்டுறவுத்துறையில் மாற்றம் தேவை-யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர்

422 0

gaaகாலத்திற்கேற்ற வகையில் கூட்டுறவுத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தாவிட்டால் தனியார் துறையுடன் போட்டிபோட முடியாத நிலை ஏற்படும் என யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன் வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்திற்கு முன்பாக அமைக்கப்பட்ட கூட்டுறவுப் பெரியார் வி.வீரசிங்கத்தின் சிலை திறப்புவிழா மற்றும் 52வது பிறந்ததின நிகழ்வில் கலந்துகொண்டு  உரையாற்றும்போது அவர் இதனைக் குறிப்பிட்டார்.

70ஆம் ஆண்டு காலப்பகுதியில் கூட்டுறவுத்துறை வடக்கில் சிறப்பாக இயங்கிவந்தது.

போர்ச்சூழலில் கூட கூட்டுறவுத்துறை நிவாரண நடவடிக்கைகளில் சிறப்பாக செயற்பட்டிருந்தது.

ஆனால் போர்சூழலின் போது கூட்டுறவுத்துறை பல அழிவுகளைச் சந்தித்திருந்தது.

அவ் அழிவுகளுக்குரிய நஸ்ரஈடு கூட்டுறவுச் சங்கங்களுக்கு கொடுக்கப்படாதது கவலையளிக்கிறது.

காலத்திற்கேற்ப கூட்டுறவுத்துறையில் மாற்றத்தை ஏற்படுத்தி அர்ப்பணிப்புடைய நேர்மையானவர்கள் மூலம் கூட்டுறவுத்துறையை கட்டியெழுப்ப முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.