மஸ்கெலியா காட்மோர் தோட்டத்தில், பிரொக்மோர் பிரிவில் மேலும் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர் பி.ஏ. பாஸ்கரன் தெரிவித்துள்ளார்.
வெள்ளவத்தை மற்றும் தெஹிவளை ஆகிய பகுதிகளில் கட்டட நிர்மாணப்பணி உதவியாளர்களாக பணியாற்றிய 35 மற்றும் 19 வயது இளைஞர்கள் இருவர், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த 13 ஆம் திகதி பிரொக்மோர் பகுதியிலுள்ள தமது வீடுகளுக்கு வந்துள்ளனர்.
இவர்கள் இருவரிடமும் கடந்த 17 ஆம் திகதி, பி.சி.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் பெறப்பட்டன. பரிசோதனைகளில் அவர்களுக்கு வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து குறித்த இருவரும், அம்பாந்தோட்டையிலுள்ள கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு சுகாதார பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நேற்று (வியாழக்கிழமை) அழைத்து செல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.