சுகாதாரப் பாதுகாப்புக்கு எந்த உத்தரவாதமும் இல்லா மல் பாடசாலைகளைத் திறப்பது குறித்து தீர்மானம் எடுக் கப்பட்டமைக்கு ஆசிரியர் சங்கங்கள் கவலை தெரிவித் துள்ளது.
மேல் மாகாணம் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட பிர தேசங்களைத் தவிர்ந்த ஏனைய அனைத்து மாகாணங் களிலும் நவம்பர் 23 ஆம் திகதி திங்கட்கிழமை வழமை போன்று மூன்றாம் தவணைக்காகப் பாடசாலைகளை ஆரம்பிக்க அரசாங்கம் எடுத்துள்ள தீமானம் குறித்து இலங்கை ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில், பாடசாலை மாணவர்களின் ஆரோக்கியத் தை உறுதி செய்யாமல் பாடசாலைகள் மீண்டும் திறக்கும் தீர்மானம் தவறானது என இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
பாடசாலைகளைத் திறக்கப்படுவதை அரசாங்கம் அறி வித்த போதிலும், முறையான செயல்முறை எதுவும் அறி விக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.