முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக மேலும் 45 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன், 24 பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் தனி மைப்படுத் தல் சட்டம் இன்னும் அமுலில் உள்ளது.
நேற்றைய தினம் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத் தில் தனிமைப்படுத்தல் சட்டத்திற்குப் பொதுமக்கள் அனு சரணை வழங்கியுள்ளதா என பொலிஸ் ஊடகப் பேச் சாளர் அஜித்ரோகண தெரிவித்துள்ளார்.
இருப்பினும் ஒரு சிலர் குழுக்களாகச் சட்டத்தை மீறியமை தெரியவந்துள்ளது.
இந்நிலையில், ட்ரோன் கெமராக்கள் கண்காணிப்பில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 117 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் இடம் பெறும் பயணங்களைக் கண்காணிக்க விமானப் படை யின் உதவியுடன் ட்ரோன் கெமராக்கள் ஈடுபடுத் தப் படும்.
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடை வெளி யைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டுக்காக மேலும் 45 பேர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
முகக் கவசம் அணியத் தவறிய மற்றும் சமூக இடைவெளி யைப் பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டிலேயே இதுவரை 358 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
அத்துடன், குறித்த நபர்களுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்டநடடிவக்கை எடுக்கப்படும் என மேலும் அவர் தெரிவித்துள்ளார்.