நுவரெலியா மானப்புல் பகுதியில் காட்டுத்தீ

342 0

hatton-fair-05-12-2016நுவரெலியா ஹட்டன் மானப்புல் வனப்பகுதி இன்று திடீரென தீப்பற்றியதால் இரண்டு ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளது.

நுவரெலியா ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குடாகம பகுதியில் உள்ள மானாப்புல் வனப்பகுதி இன்று தீடிரென தீ பற்றியதால் சுமார் 2 ஏக்கர் பகுதி எரிந்து சாம்பலாகியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இன்று மதியம் 1 மணியளவில் இத்தீ விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காற்றின் வேகம் காரணமாக தீ அதிகளவில் பரவியதால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என்றும் இதன்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.